பெண்ணை மானபங்கம் செய்ததாக, பாடகர் யாஷ் வடாலி மேடையில் பாடிக்கொண்டிருக்கும் போது கைது செய்யப்பட்டார்.
மும்பை கோரேகாவில் இந்தி பட பாடகர் யாஷ் வடாலியின் நண்பருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் பிறந்த நாள் விழா நடந்தது. இதில் யாஷ் வடாலி கலந்து கொண்டு பாடினார். அப்போது 39 வயது பெண் ஒருவர் குறிப்பிட்ட பாடலை பாடும்படி சொன்னாராம். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த யாஷ், அந்தப் பெண்ணை மானபங்கம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் யாஷ் வடாலி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந் நிலையில் ஓடிஸ்வரா பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பாடிக்கொண்டிருந்த அவரை, போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.