இனிமையாக முடிந்தது பாடகி விஜயலட்சுமி திருமணம்

இனிமையாக முடிந்தது பாடகி விஜயலட்சுமி திருமணம்
இனிமையாக முடிந்தது பாடகி விஜயலட்சுமி திருமணம்

மலையாள பின்னணி பாடகி விஜயலட்சுமியின் திருமணம் கேரளாவில் இன்று எளிமையாக நடைபெற்றது.

ப்ருத்விராஜ் நடித்த ‘ஜே.சி.டேனியல்’ படத்தில் இடம்பெற்ற ‘காற்றே காற்றே’ என்ற பாடல் மூலம்  பாடகியாக அறிமுகமானவர் மலையாள பாடகி, வைக்கம் விஜயலட்சுமி. பார்வையற்றவரான இவர், அடுத்து ‘வீர சிவாஜி’ படத்தில் ‘சொப்பன சுந்தரி நான் தானே’, ‘என்ன மோ ஏதோ’ படத்தில் ‘புதிய உலகை புதிய உலகை’ உட்பட தமிழில் பல பாடல்களை பாடியுள்ளார். தமிழ், மலையாளத்தில் தனது வசீகர குரல் மூலம் பிரபலமான இவரது வாழ்க்கை கதை திரைப்படமாக எடுக்கப்படவுள்ளது. இதை விஜயகுமார் இயக்குகிறார்.  விஜயலட்சுமியாக, மீன் விற்றுப் படிக்கும் மாணவி ஹனன் ஹமீது நடிக்கிறார்.

இந்நிலையில் விஜயலட்சுமிக்கும் சந்தோஷ் என்பவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு கடந்த வருடம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் கருத்துவேறுபாடு காரணமாக தனது திருமணம் நின்றுவிட்டதாக வைக்கம் விஜயலட்சுமி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மிமிக்ரி கலைஞர் அனூப் என்பவருக்கும் விஜயலட்சுமிக்கும் திருமண முடிவு செய்யப்பட்டு, நிச்சயதார்த்தம் விஜயலட்சுமியின் வீட்டில் நடைபெற்றது.

அதன்படி அவர்களது திருமணம் வைக்கமில் உள்ள கோயில் ஒன்றில் இன்று எளிமையாக நடைபெற்றது. அவரது திருமணத்தில் நண்பர்கள், உறவினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com