பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு கடவுள் அளித்த திருமண பரிசு கண் பார்வை...!

பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு கடவுள் அளித்த திருமண பரிசு கண் பார்வை...!

பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு கடவுள் அளித்த திருமண பரிசு கண் பார்வை...!
Published on

பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு திருமண பரிசாக கண் பார்வை கிடைத்துள்ளது.

பாடகி வைக்கம் விஜயலட்சுமி கண் பார்வை இல்லாமால் இருந்தாலும் சிறு வயதிலிருந்தே இசையால் உலகை பார்த்தவர். தமிழில் ரோமியோ ஜூலியட் படத்தில் ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி..., வீர சிவாஜியில் ‘சொப்பன சுந்தரி நான் தானே, சொப்பன லோகத்தில் தேன்தானே...’, ‘குக்கூ’ படத்தில், ‘கோடையில மழை போல’உட்பட பல்வேறு பிரபல பாடல்களை பாடியுள்ளார்.

தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பிரபல பாடகியாக விளங்கும் விஜய லட்சுமிக்கும் (35), கேரளத்தைச் சேர்ந்த இசையமைப்பாளர் சந்தோஷுக்கும், கடந்த டிசம்பர் 13-ம் தேதி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. வரும் மார்ச் 29-ம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக தனது கண் பார்வைக்காக தீவிர சிகிச்சை எடுத்து வந்த விஜயலட்சுமிக்கு சிகிச்சையின் பலனால் தற்போது பார்வை கிடைத்துள்ளது. இதனால், திருமணம், கண்பார்வை என்ற இரட்டிப்பு மகிழ்ச்சியில் வைக்கம் விஜயலட்சுமி மூழ்கியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com