\
‘அண்ணாத்த மாஸூக்கே பாஸூ’- வெளியானது எஸ்.பி.பி.யின் ரஜினிக்கான கடைசி பாடல்

‘அண்ணாத்த மாஸூக்கே பாஸூ’- வெளியானது எஸ்.பி.பி.யின் ரஜினிக்கான கடைசி பாடல்

‘அண்ணாத்த மாஸூக்கே பாஸூ’- வெளியானது எஸ்.பி.பி.யின் ரஜினிக்கான கடைசி பாடல்
Published on

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடைசியாக ரஜினியின் 'அண்ணாத்த' படத்தில் பாடிய பாடல் வெளியாகியுள்ளது.

இசையமைப்பாளர் டி.இமானின் இசையில் உருவாகியுள்ள இந்தப் பாடல்தான் எஸ்.பி.பி. கடைசி பாடல் என இதன் பாடலாசிரியர் விவேகாவும், டி.இமானும் அவர் மறைந்த சில நாள்களுக்கு பின் பாடல் பதிவின் புகைப்படங்களுடன் பகிர்ந்திருந்தனர். இந்த நிலையில், வரும் அக்டோபர் 4 ஆம் தேதி மாலை 6 மணிக்கு 'அண்ணாத்த' படத்தின் முதல் பாடல் வெளியிடப்படும் என்று படக்குழு சில தினங்களுக்கு முன் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு. அதேபோல இன்றைய தினம் இப்பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

எஸ்.பி.பி., ரஜினிக்கே உரித்தான கனீர் குரலில் ‘அண்ணாத்த வரேன் அதிரடி சரவெடி தெருவெங்கும் வீச’; ‘உலகினில் அழகு எது சொல்லவா... எதிரிக்கும் இரங்கும் குணமல்லவா! உயர்தர வீரம் எது சொல்லவா... சுயதவறுணரும் செயலல்லவா’ என பாடியுள்ளார். வழக்கமான ரஜினி பாடலுக்கே உரித்தான வகையில் ஸ்டைலாக மாஸாக பாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனாலேயே என்னவோ பாடலிலேயே ‘அண்ணாத்த மாஸூக்கே பாஸூ’ என்றும் வரி வைத்துவிட்டார்கள்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com