\
லேசான கொரோனா அறிகுறி : பாடகர் எஸ்.பி.பி மருத்துவமனையில் அனுமதி

லேசான கொரோனா அறிகுறி : பாடகர் எஸ்.பி.பி மருத்துவமனையில் அனுமதி

லேசான கொரோனா அறிகுறி : பாடகர் எஸ்.பி.பி மருத்துவமனையில் அனுமதி
Published on

லேசான கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறிகளுடன் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமண்யம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிரபலங்கள் பலரும் கூட இந்த வைரஸ் தொற்றுக்கு பாதிப்படைந்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல பாடகர் எஸ்.பி.பி லேசான கொரோனா அறிகுறிகளுடன் சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது சுவாசநிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அத்துடன் மருத்துவர்கள் குழு அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com