\
முதல் பார்வையிலேயே எங்கள் இதயத்தை நிரப்பினான்: மகனை அறிமுகப்படுத்திய ஸ்ரேயா கோஷல்

முதல் பார்வையிலேயே எங்கள் இதயத்தை நிரப்பினான்: மகனை அறிமுகப்படுத்திய ஸ்ரேயா கோஷல்

முதல் பார்வையிலேயே எங்கள் இதயத்தை நிரப்பினான்: மகனை அறிமுகப்படுத்திய ஸ்ரேயா கோஷல்
Published on

சமீபத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்த ஸ்ரேயா கோஷல் தனது மகனை தாய்மையுடன் அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்தியாவின் முன்னணி பாடகிகளில் ஒருவரான ஸ்ரேயா கோஷல்  கடந்த 2015-ஆம் ஆண்டு தனது நண்பரான ஷைலாதித்யா முகோபாத்யாயாவை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிகளுக்கு சமீபத்தில்  ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், இன்று தனது மகனை கைகளில் ஏந்தி தாய்மையின் பூரிப்போடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள ஸ்ரேயா கோஷல் மகனின் பெயரையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

அவரின் ட்விட்டர் பதிவில்,  ”அவன் மே  22 ஆம் தேதி வந்து எங்கள் வாழ்க்கையை மாற்றினான். அவன் பிறந்து எங்களை பார்த்த முதல் பார்வையிலேயே தாய் தந்தை என்ற பாசத்தால் எங்கள் மனதை  நிரப்பினான். கட்டுப்படுத்த முடியாத புனிதமான அளவில்லா பாசம் அது” என்று நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com