சினிமா
இனியகுரலால் மக்களின் மனஅழுத்தத்திற்கு சிகிச்சையளித்த எஸ்.பி.பி உடல்நலம் பெறட்டும்:ஸ்டாலின்
இனியகுரலால் மக்களின் மனஅழுத்தத்திற்கு சிகிச்சையளித்த எஸ்.பி.பி உடல்நலம் பெறட்டும்:ஸ்டாலின்
இனிய குரலால் மக்களின் மன அழுத்தத்திற்கு சிகிச்சை அளித்த எஸ்.பி.பி விரைந்து முழு உடல்நலன் பெற்று மீண்டும் தன் பயணத்தைத் தொடரட்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “ கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலம் தேறி வருகிறார் என்ற செய்தி மகிழ்ச்சியளிக்கிறது. இனிய குரலால் மக்களின் மன அழுத்தத்திற்கு சிகிச்சை அளித்த எஸ்.பி.பி அவர்கள் விரைந்து முழு உடல்நலன் பெற்று மீண்டும் தன் பயணத்தைத் தொடரட்டும்” என்று தெரிவித்துள்ளார்

