\
Singer S Janaki memories updates
எஸ்.ஜானகிஎக்ஸ் தளம்

17 மொழிகள்.. அனைத்திலும் கலக்கியது எப்படி? - எஸ்.ஜானகியின் நினைவலைகள்!

பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி காலமானதைத் தொடர்ந்து, அவர் பிறமொழிகளில் பாடிய திறமை குறித்துப் பேசப்படுகிறது.
Published on

தமிழ் சினிமாவில், பழங்காலம் தொட்டு பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹிட் பாடல்களை கொடுத்த பாடகி எஸ்.ஜானகி, இன்று நம்முடன் இல்லை. அவர் இம்மண்ணைவிட்டு மறைந்தாலும், அவர் பாடிய பாடல்கள் நம்மை என்றும் உறங்காது வைத்திருக்கும். அவரது இழப்பு தமிழ்த் திரையுலகில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரைப் பற்றிய நினைவலைகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில், பின்னணிப் பாடுவதில் எண்ணிலடங்கா சாதனைகளை நிகழ்த்திய தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம், வங்காளி, சமஸ்கிருதம், ஒரியா, குஜராத்தி, ஆங்கிலம், கொங்கினி, துளு, சவுராஷ்டிரா, ஜெர்மன், படுகா, பஞ்சாபி என 17 மொழிகளில் சுமார் 16 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறார்.

இத்தனை மொழிகளில் பாடல்கள் பாடிய இந்தச் சாதனை திரையுலகில் இதுவரை எவரும் நிகழ்த்தாத சாதனையாகப் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், அவர் பிறமொழிகளில் பாடிய திறமை குறித்துப் பேசப்படுகிறது. அதாவது அவர் தமிழில் பாடும் பாடலைத் தமிழிலேயே வைத்துக்கொண்டும், தெலுங்கில் பாடும்போது தெலுங்கிலும், இந்தியில் பாடும்போது இந்தியிலும், மற்ற மொழிகளிலும் பாடும்போது தெலுங்கிலும் எழுதி வைத்துக்கொண்டு பாடுவதையே வழக்கமாக வைத்திருந்தார். இதனாலேயே அவர் பலமொழிகளில் பாட முடிந்தது என்கின்றனர் திரை வல்லுநர்கள். இன்று, அவரது குரல் காற்றில் கலந்தாலும், நம் மனதைவிட்டு என்றும் மறக்காது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com