\
ஜெனீவாவில் பிறந்தநாள் கொண்டாடிய ஆஷா போஸ்லே

ஜெனீவாவில் பிறந்தநாள் கொண்டாடிய ஆஷா போஸ்லே

ஜெனீவாவில் பிறந்தநாள் கொண்டாடிய ஆஷா போஸ்லே
Published on

பிரபல இந்தி பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே தனது பிறந்தநாளை ஜெனீவாவில் கொண்டாடினார். அவரது குடும்பத்தினர் விருப்பத்திற்கிணங்க மிக எளிமையாக இந்தப் பிறந்தநாளை கொண்டாடி இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

ஆஷா போஸ்லேவுக்கு பிரபல பாடகரும் இசையமைப்பாளருமான ஷங்கர் மகாதேவன் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். நம் நாட்டின் ‘ராக்ஸ்டார்’என பட்டம் வழங்கி பாராட்டியிருக்கிறார் ஷங்கர். பிறந்தநாள் வாழ்த்துகள் குறித்து ஆஷா கூறுகையில் "உங்களின் அக்கறையால் என் வாழ்வுக்கான பலனை அடைந்திருக்கிறேன்’என நெகிழ்ச்சியாக குறிப்பிட்டிருக்கிறார்.

இசைத்துறையில் மகத்தான சாதனைபடைத்த பாடகி போஸ்லே. இதுவரை 14 மொழிகளில் 12 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடி திரை ரசிகர்களை தன்வயப்படுத்தியவர். 1943ல் தன் பத்து வயதில் பாட ஆரம்பித்த போஸ்லே இன்றுவரை இடைவிடாமல் தன் இசை பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com