ரிலீஸ் ஆன 2 மணி நேரத்தில் ஆன்லைனில் வெளியான திரைப்படம்; ஷாக் ஆன படக்குழு! கமிஷனர் ஆபிஸில் புகார்

சிங்கப்பெண்ணே திரைப்படம் வெளியாகி இரண்டு மணிநேரத்திலேயே ஆன்லைனில் வெளியாகிவிட்டதாகக் கூறி காவல் ஆணையர் அலுவலகத்தில் படக்குழு சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஜே. எஸ்.பி சதீஷ்குமார் இயக்கி தயாரித்த சிங்கப்பெண்ணே திரைப்படத்தில் சமுத்திரக்கனி, சென்ராயன், சில்பா மஞ்சுநாத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியான நிலையில், இரண்டே மணிநேரத்தில் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இதுகுறித்து, திரைப்பட தயாரிப்பாளர் ஜே.எஸ்.பி ஸ்டுடியோஸ் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் திரைப்படம் வெளிவந்திருப்பதால் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள அவர்கள், ஆன்லைனில் திரைப்படத்தை வெளியிட்ட நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com