சிங்கம் 3 படத்துடன் மோதலை தவிர்த்த போகன்

சிங்கம் 3 படத்துடன் மோதலை தவிர்த்த போகன்

சிங்கம் 3 படத்துடன் மோதலை தவிர்த்த போகன்
Published on

நீண்ட நாட்களாக திரைக்கு வராமல் தள்ளிப்போன போகன் மற்றும் சிங்கம் 3 ஆகிய திரைப்படங்கள் பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் போகன் பிப்ரவரி 2 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

இயக்குனர் ஹரி - நடிகர் சூர்யா கூட்டணியில் உருவாகியிருக்கும் 5-வது படம் ‘சிங்கம் 3’ என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் கூட்டணியில் உருவான ஆறு, வேல், சிங்கம்1, சிங்கம்2 ஆகிய படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதால் சிங்கம் 3 படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. சில பல காரணங்களுக்காக ரிலிஸ் தேதி பலமுறை தள்ளிப்போடப்பட்ட நிலையில் ஜனவரி 26 ஆம் தேதி வேயிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு தற்போது படம் மீண்டும் பிப்ரவரி 9 ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் லக்ஷ்மன் இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘போகன்’ இப்படத்தை பிரபு தேவா தனது தயாரிப்பு நிறுவனமான பிரபு தேவா ஸ்டுடியோஸ் மூலம் தயாரித்துள்ளார். பிப்ரவரி 9 ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் சிங்கம் 3 படத்துடன் மோதலை தவிர்க்க படம் முன்கூட்டியே பிப்ரவரி 2 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

போகன் மற்றும் சிங்கம் 3 ஆகிய திரைப்படங்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, திரையரங்கு கிடைக்காதது, வர்தா புயல், போன்ற பல பிரச்சனைகளால் வெளிவராமல் இருந்த நிலையில் தற்போது இரண்டு படங்களின் வெளியிட்டு தேதியும் உறுதி செய்யப்பட்டுள்ளது இவ்விரண்டு படங்களுமே சொன்னபடி இந்த முறையாவது திரைக்கு வருமா இல்லை மீண்டும் தள்ளிப்போடப்படுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com