பிக்பாஸ் வீட்டிற்கு வரும் சிந்துசமவெளி  நாயகன்!

பிக்பாஸ் வீட்டிற்கு வரும் சிந்துசமவெளி நாயகன்!

பிக்பாஸ் வீட்டிற்கு வரும் சிந்துசமவெளி நாயகன்!
Published on

பிக்பாஸ் வீட்டிற்கு நேற்று புதிதாக நடிகை சுஜா வருணி வருகை தந்துள்ள நிலையில் புதிய போட்டியாளராக நடிகர் ஹாரிஷ் பங்கேற்க இருக்கிறார். 

பிக்பாஸ் போட்டியாளர்களில் பலரும் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், நடிகை பிந்துமாதவி சில வாரங்களுக்கு முன் புதிதாக அழைக்கப்பட்டார். அதனையடுத்து நேற்று சுஜா வருணி வருகை தந்துள்ளார். இந்நிலையில் சிந்துசமவெளி, வில் அம்பு படங்களில் நாயகனாக நடித்த ஹாரிஷ் கல்யாண் சினேகனுடன் அறிமுகமாகும் ப்ரமோ இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

வைல்டு கார்டு ரவுண்டு மூலம் ஓவியா அல்லது பரணியை அழைத்து வர இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது சுஜா வருணி, ஹாரிஷ் கல்யாண் வருகை தந்துள்ளனர். மேலும் சில போட்டியாளர்களை அழைத்து வர பிக்பாஸ் நிகழ்ச்சி நிர்வாகிகள் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com