“யாரும் பீதியடைய வேண்டாம்.. பீதியை பரப்பவும் வேண்டாம்” கொரோனாவுக்காக சிம்ரனின் அட்வைஸ்

“யாரும் பீதியடைய வேண்டாம்.. பீதியை பரப்பவும் வேண்டாம்” கொரோனாவுக்காக சிம்ரனின் அட்வைஸ்
“யாரும் பீதியடைய வேண்டாம்.. பீதியை பரப்பவும் வேண்டாம்” கொரோனாவுக்காக சிம்ரனின் அட்வைஸ்

நடிகை சிம்ரன், கொரோனா விழிப்புணர்வு வேண்டி அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் அதிகபட்சமாக 22 பேருக்கும், மகாராஷ்டிராவில் 19 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹரியானாவில் 15 பேரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதேபோல் உத்திரபிரதேசத்தில் 11 பேருக்கும் கர்நாடகாவில் 7 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. லடாக்கில் 3 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ராஜஸ்தானில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

ஆந்திரா, தெலங்கானா, காஷ்மீர் மற்றும் பஞ்சாப்பில் தலா ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். தமிழகத்தில் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் வைரஸ் பாதிப்பு நீங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் அவர் மருத்துவமனையில் தொ‌டர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சூழலில் கொரோனா வைரஸால் டெல்லியைச் சேர்ந்த ஒருவரும், கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஆகவே சுகாதாரமாக இருக்க வலியுறுத்தி திரை நட்சத்திரங்கள் பலரும் ட்விட்டரில் கருத்து கூறி வருகின்றனர். அதன் தொடக்கமாக நடிகை ஸ்ருதி ஹாசன் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், நடிகை சிம்ரன், கொரோனா விழிப்புணர்வு வேண்டி அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “அதிகமான செய்திகள் கொரோனா குறித்து வெளியாகி வருகின்றன. இது உண்மையில் வருத்தமாக உள்ளது. எங்கும் அரசு அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வருகிறது. பொறுப்புள்ள குடிமகனாக நாம் முன்னெச்சரிகை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். யாரும் பீதியடைய வேண்டாம். மேலும் பீதியை பரப்ப வேண்டாம்.

உங்களது கைகளை மிக சுத்தமாக கழுவுங்கள். உங்கள் முகத்தை யாரும் தொட வேண்டாம். உங்களின் சுகாதார அளவை சரியாக கடைபிடியுங்கள். கண்டிப்பாக உங்களின் சுகாராத்தை தினமும் கடைபிடியுங்கள். ஏதாவது அறிகுறிகள் இருப்பின் எளிமையாக எடுத்துக் கொள்ள வேண்டாம். உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லுங்கள். வெளியில் போகும்போது எல்லாம் மாஸ்க் அணிந்து செல்லுங்கள். நலமாக இருங்கள். ஆரோக்கியமாக இருங்கள். மகிழ்ச்சியாக இருங்கள்” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com