ஒரு காலத்தில் சினிமா ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்த சிம்ரன் தற்போது சிவகார்த்திகேயனுக்கு வில்லியாகிறார். இயக்குநர் பொன்ராம் சிவகார்த்திகேயனுடன் இணையும் மூன்றாவது படத்தில் சிம்ரன் வில்லியாக நடிக்க இருக்கிறார்.
சிவகார்த்திகேயனின் தந்தையாக நெப்போலியன் நடிக்கிறார். இந்தப் படத்தில் ஹீரோயின் சமந்தாவுக்கும் சண்டைக்காட்சிகள் இருப்பதால் அவர் சிலம்பப் பயிற்சி எடுத்து வருகிறாராம். பொன்ராமின் ஆஸ்தான காமெடியன் சூரியும் இப்படத்தில் நடிக்கிறார். அவருடன் மனோபாலா, யோகி பாபு நடிக்கும் இப்படத்தை ஆக்சன் கதைக்களத்தில் இயக்க இருக்கிறாராம் பொன்ராம்.