\
துருவ நட்சத்திரத்தில் இணைந்த சிம்ரன், ராதிகா

துருவ நட்சத்திரத்தில் இணைந்த சிம்ரன், ராதிகா

துருவ நட்சத்திரத்தில் இணைந்த சிம்ரன், ராதிகா
Published on

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் துருவ நட்சத்திரம் படத்தில் சிம்ரன் மற்றும் ராதிகா ஆகியோரும் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நாயகிகளாக ரீது வர்மா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், சின்னத்திரை தொகுப்பாளியான திவ்யதர்ஷினி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் படக்குழுவினர் கூறுகின்றனர். சர்வதேச சண்டைப் பயிற்சி கலைஞர்கள் தவிர, இந்த படத்தில் பார்த்திபன் உள்ளிட்ட 12 நட்சத்திரங்கள் நடிக்க இருக்கின்றனர். இந்த நிலையில் சிம்ரன் மற்றும் ராதிகாவும் துருவநட்சத்திரம் படக்குழுவுடன் இணைந்துள்ளனர். பல்கேரியா, ஸ்லோவேனியா உள்ளிட்ட 4 ஐரோப்பிய நாடுகளில் 22 நாட்கள் படப்பிடிப்பு நடத்த இயக்குனர் கௌதம் மேனன் முடிவு செய்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் யாரும் படமாக்காத புதிய இடங்களில் படப்பிடிப்பு நடத்த கௌதம் திட்டமிட்டுள்ளாராம். 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com