\
சிம்ரன் வெளியிட்ட கலாட்டா வீடியோ

சிம்ரன் வெளியிட்ட கலாட்டா வீடியோ

சிம்ரன் வெளியிட்ட கலாட்டா வீடியோ
Published on

துருவ நட்சத்திரம் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட கலாட்டா வீடியோ ஒன்றை நடிகை சிம்ரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘துருவ நட்சத்திரம்‘. படத்தில் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.

இதுதவிர நடிகை ராதிகா சரத்குமார், சிம்ரன், தொகுப்பாளினி டிடி ஆகியோரும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன் தகவல் வெளியானது. பவர் பாண்டி படத்தில் கேமியோ ரோலில் தோன்றினாலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் இப்படத்தில் நடிக்க டிடி ஒப்பந்தமானதாக கூறப்பட்டது.

இந்நிலையில் நடிகை சிம்ரன் தனது ட்விட்டர் பக்கத்தில் புது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் துருவ நட்சத்திரம் படப்பிடிப்பில் நடிகை சிம்ரன், ராதிகா, டிடி ஆகியோர் கலாட்டவாக டான்ஸ் ஆடுகின்றனர். ஐரோப்பில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் படத்தினை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com