\
“மன்சூர் அலிகானை விடுதலை செய்க” நாளை களத்தில் குதிக்கிறார் சிம்பு

“மன்சூர் அலிகானை விடுதலை செய்க” நாளை களத்தில் குதிக்கிறார் சிம்பு

“மன்சூர் அலிகானை விடுதலை செய்க” நாளை களத்தில் குதிக்கிறார் சிம்பு
Published on: 

நடிகர் மன்சூர் அலிகானை விடுதலை செய்ய சொல்லி நாளை கமிஷ்னர் அலுவலகம் சென்று முறையிட இருக்கிறார் நடிகர் சிம்பு.

ஐபிஎல் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான் தற்போது சிறையில் உள்ளார். அதற்காக நியாயம் கேட்டு நாளை கமிஷ்னர் அலுவலகம் செல்ல இருப்பதாக நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர், “ நான் காரணம் இல்லாமல் ஒரு விஷயத்தை பகிர்ந்து கொண்டதில்லை. மனிதநேய அடிப்படையில் ஒரு மனித உரிமைக்காக மனிதாபிமானம் கொண்ட ஒரு மண் வாசனைக் கொண்ட, மதச்சார்பற்ற அரசியல் சார்பற்ற, ஒரு தனி மனிதனை தமிழ் கலைஞனை, அதாவது அண்ணன் மன்சூர் அலிகான் அவர்களை விடுதலை செய்யக் கோரி கமிஷ்னர் ஆஃபீஸ் சென்று மனுக்கொடுக்க இருக்கிறேன்” என்று அவர் பேசியிருக்கிறார். அதன் அடிப்படையில் நாளை அவரை அங்கு சந்திக்கலாம் என கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com