யுவன் சங்கர் ராஜா இண்டிபெண்டண்ட் ஆல்பத்தில் பாடும் சிம்பு

யுவன் சங்கர் ராஜா இண்டிபெண்டண்ட் ஆல்பத்தில் பாடும் சிம்பு
யுவன் சங்கர் ராஜா இண்டிபெண்டண்ட் ஆல்பத்தில் பாடும் சிம்பு

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து தயாரிக்கும் இண்டிபெண்டண்ட் ஆல்பத்தில் சிம்பு பாடவிருக்கிறார்.

’செல்வராகவன் – யுவன்’, ’விஷ்ணு வர்தன் – யுவன்’ கூட்டணி போன்றே ரசிகர்களிடமும் 90ஸ் கிட்ஸ்களிடமும் அதிகம் வரவேற்பைப் பெற்றக்கூட்டணி என்றால், அது சிம்பு – யுவன் கூட்டணிதான். யுவன் இசையில் ‘மன்மதன்’, ‘வல்லவன்’, ‘சிலம்பாட்டம்’, ‘வானம்’ என அத்தனைப் படப்பாடல்களும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவை. இப்போதும் கொண்டாடப்பட்டுக் கொண்டிருப்பவை.  இந்தக் கூட்டணி எப்போதும் கவனம் பெற சிம்பும் ஒரு நல்ல இசை ரசிகராக இருப்பது முக்கிய காரணம்.

சிம்பு படத்திற்கு யுவன் இசையமைத்தாலே அந்தப் படத்தில் ஒரு பாடலையாவது சிம்பு பாடுவார். இந்தப் பாடல்கள் ஒருபுறம் கொண்டாடப்பட்டது என்றால்,  யுவன் – சிம்பு போட்டிப்போட்டுக்கொண்டு பாடிய ’எவண்டி உன்ன பெத்தான்’ இந்தியா முழுக்க வைரல் ஹிட் அடித்தது. இந்தக் கூட்டணி மீண்டும் எப்போது இணையும் என்று எதிர்ப்பார்த்த ரசிகர்களை  உற்சாகப்படுத்தும் விதமாக, ‘வானம்’ படத்திற்குப்பிறகு 10 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மாநாடு’ படத்தில் இணைந்துள்ளனர். 

இப்படத்தின், முதல்பாடல் வெளியாகி கவனம் ஈர்த்துள்ள நிலையில், யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்கும் இண்டிபெண்டண்ட் ஆல்பம் பாடலில் சிம்பு பாடவிருக்கிறார். இதில், காளிதாஸ் ஜெயராம், மேகா ஆகாஷ் நடிக்க சாண்டி மாஸ்டர் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். இதனை யுவன்ஷங்கர் ராஜா தனது இன்ஸ்டாவில் அதிகாரபூர்வமாக தெரிவித்திருக்கிறார். சமீபத்தில், தீ-தெருக்குரல் அறிவின் ’என்சாய் என்சாமி’ இண்டிபெண்டண்ட் ஆல்பம் வைரல் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com