\
‘அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுவிட்டீர்கள்‘ - சிம்புவை பாராட்டிய பிரபல தெலுங்கு நடிகர்

‘அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுவிட்டீர்கள்‘ - சிம்புவை பாராட்டிய பிரபல தெலுங்கு நடிகர்

‘அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுவிட்டீர்கள்‘ - சிம்புவை பாராட்டிய பிரபல தெலுங்கு நடிகர்
Published on

நடிகர் சிலம்பரசன் அற்புதமான பாடகர் என பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி தெரிவித்துள்ளார்.

பிரபல தமிழ் இயக்குநரான லிங்குசாமி, தற்போது இயக்கி வரும் படம் ‘தி வாரியர்’. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகும் இந்தப் திரைப்படத்தில், பிரபல தெலுங்கு நடிகரான ராம் பொத்தினேனி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். நடிகர் ஆதி வில்லனாக நடிக்கிறார். மேலும் இந்தப் படத்தில், அக்ஷரா கௌடா, பாராதிராஜா, நதியா, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்நிலையில், இந்தப் படத்தில் புல்லட் என்ற பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். படக்குழு கேட்டதிற்கிணங்க, தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் அந்த பாடலை சிம்பு பாடியுள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்ற இந்த பாடல் பதிவின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. 

இந்நிலையில், அந்தப் பாடலைக்கேட்ட, படத்தின் கதாநாயகன் ராம் பொத்தினேனி, “என்ன ஒரு அற்புதமான பாடகர் நீங்கள்! இந்த பாடலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுவிட்டீர்கள். அதற்கு நன்றி” என நடிகர் சிம்புவை பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்தப் படம் வருகிற ஜூலை 14-ம் தேதி, தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com