\
சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ இரண்டு நாட்கள் வசூல் எவ்வளவு? - வெளியான தகவல்

சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ இரண்டு நாட்கள் வசூல் எவ்வளவு? - வெளியான தகவல்

சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ இரண்டு நாட்கள் வசூல் எவ்வளவு? - வெளியான தகவல்
Published on

சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் இரண்டு நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிம்பு - இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் - இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ளப் படம் ‘வெந்து தணிந்தது காடு’. இந்தப் படத்தில், சிம்புக்கு ஜோடியாக இலங்கையைச் சேர்ந்த நடிகை சித்தி இத்னானி நடித்துள்ளார்.

மூத்த நடிகையான ராதிகா, சிம்புவிற்கு அம்மாவாக நடித்துள்ளார். சித்திக், நீரஜ் மாதவ், டெல்லி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று வெளியான இந்தத் திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. தமிழ்நாட்டிலிருந்து பிழைப்புக்காக வேலை தேடிச் செல்லும் சாதாரண இளைஞன், மும்பையின் டானாக மாறும் வழக்கமான கேங்ஸ்டர் கதைதான் என்றாலும், ஏ.ஆர். ரஹ்மானின் இசை, சிம்புவின் எதார்த்தமான நடிப்பு ஆகியவை ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்நிலையில், இந்தப் படத்தின் இரண்டு நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, உலகம் முழுவதும் இரண்டு நாட்களில் இந்தப் படம் 21 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இன்றும், நாளையும் வார விடுமுறை நாட்கள் என்பதால் மேலும் இந்தப் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com