\
சிம்புவின் 'பத்து தல' இசை வெளியீட்டு விழா எங்கே, எப்போது நடைபெறுகிறது தெரியுமா?

சிம்புவின் 'பத்து தல' இசை வெளியீட்டு விழா எங்கே, எப்போது நடைபெறுகிறது தெரியுமா?

சிம்புவின் 'பத்து தல' இசை வெளியீட்டு விழா எங்கே, எப்போது நடைபெறுகிறது தெரியுமா?
Published on

சிம்புவின் ‘பத்து தல’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் இடம் மற்றும் தேதியை, படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீ முரளி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘மஃப்டி’ படத்தின் ரீமேக்தான் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்து தல’ திரைப்படம். இந்தப் படத்தை ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ ஆகியப் படங்களின் இயக்குநர் கிருஷ்ணா இயக்கியுள்ளார். பத்து தல படத்தில் சிம்புவுடன் கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

‘பத்து தல’ திரைப்படம் வரும் 30-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் பென் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. இந்நிலையில், வருகிற 18-ம் தேதி மாலை 5 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கில் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெறவுள்ளதாக புதிய போஸ்டருடன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com