\
இது எங்களுடைய குடும்பப்பாட்டு: யுவனுடன் சிம்புவின் ‘மாநாடு’ முதல் பாடலை பாடியுள்ள பவதாரணி

இது எங்களுடைய குடும்பப்பாட்டு: யுவனுடன் சிம்புவின் ‘மாநாடு’ முதல் பாடலை பாடியுள்ள பவதாரணி

இது எங்களுடைய குடும்பப்பாட்டு: யுவனுடன் சிம்புவின் ‘மாநாடு’ முதல் பாடலை பாடியுள்ள பவதாரணி
Published on

நாளை மறுநாள் வெளியாகவிருக்கும் சிம்புவின் ‘மாநாடு’ படத்தின் முதல் பாடலை யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து அவரது சகோதரி பவதாரணியும் பாடியிருக்கிறார்.

 சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் முதல் பாடல் ’Meherezylaa’ வரும் ஜூன் 21 ஆம் தேதி மதியம் வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு. இந்நிலையில், இன்று மாநாடு படத்தின் முதல் பாடல் டீசர் வெளியாகும் என்று அறிவிப்பு செய்தது படக்குழு. இன்று மாலை வெளியான டீசரில் சர்ப்ரைசாக இப்பாடலை யுவனுடன் இணைந்து அவரது சகோதாரி பவதாரணியும் சேர்ந்து பாடியிருக்கிறார். ஏற்கனவே, பவதாரணி யுவன்ஷங்கர் ராஜா இசையில்  ’தாமிரபரணி’ படத்தில் ‘தாலியே தேவை இல்லை’ பாடலையும், ’புதிய கீதை’ படத்தில் ‘மெர்குரி பூவே’ பாடலையும் பாடியிருக்க்கிறார். தற்போது, யுவனுடனே இணைந்து பாடியிருப்பது எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com