மன்மதன் படத்திற்குப் பிறகு இயக்குனர் மணிரத்னம் இயக்கும் புது படத்தில் சிம்புவும் ஜோதிகாவும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் வெளிவர இருக்கிற புதிய படத்தில் விஜய்சேதுபதி, பகத்பசில், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்க இருப்பதாக தகவல் தலைக்காட்ட ஆரம்பித்திருக்கிறது. இந்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாகவும் அதற்கான பேச்சு வார்த்தை நடந்து முடிந்திருப்பதாகவும் தெரிய வருகிறது.
திருமணத்திற்குப் பிறகு பல வருடங்களாக ஜோதிகா நடிப்பதை தவிர்த்து வந்தார். இதனைத்தொடர்ந்து நீண்ட நாள் கழித்து ‘36 வயதினிலே’வுக்கு பிறகு பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் மட்டும் நடிப்பேன் என அவர் கூறியிருந்தார். ஆகவேதான் அவர் ஹீரோவை மையமாக வைத்து உருவாகும் கதைகளை தவிர்த்து வந்தார். ஆனால் இப்பொழுது பாலா இயக்கும் "நாச்சியார்" படத்தில் ஜி.வி.பிரகாஷூடன் நடித்து முடித்திருக்கிறார். இதற்கு முன்னதாக மகளிர் மட்டும் என்ற படத்திலும் அவர் நடித்து முடித்துள்ளார். அடுத்து மணிரத்னம் இயக்கப் போகும் படத்தில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோதிகாவும் இணையவுள்ளதாகவும் அதில் சிம்புவும் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.