கெளதம் மேனன் இயக்கத்தில் மீண்டும் சிம்பு - அதிகாரபூர்வ அறிவிப்பு!

கெளதம் மேனன் இயக்கத்தில் மீண்டும் சிம்பு - அதிகாரபூர்வ அறிவிப்பு!

கெளதம் மேனன் இயக்கத்தில் மீண்டும் சிம்பு - அதிகாரபூர்வ அறிவிப்பு!
Published on

கெளதம் மேனன் இயக்கத்தில் மீண்டும் சிம்பு நடிக்கவிருக்கிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது.

கடந்த 2010 ஆம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ காதலர்களின் பாராட்டுக்களை குவித்தது. இசை ரசிகர்களின் இதய கீதமாய் பாடல்கள் ஹிட் அடித்தன. சிம்பு, த்ரிஷாவின் சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்தது. அதனைத்தொடந்து சிம்பு, கௌதம் மேனன் கூட்டணி ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் மீண்டும் இணைந்தார்கள். அந்தப் படத்தின் பாடல்கள் இப்போதும் பலரின் காலர் டியூனாய் ஒலிக்கிறது.

இந்நிலையில், தற்போது ’மாநாடு’, ’பத்துதல’ படங்களில் நடித்துவரும் சிம்பு மீண்டும் கெளதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இதற்கான அறிவிப்பை அதிகாரபூர்வமாக வேல்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. மீண்டும் இக்கூட்டணி ஹாட்ரிக் வெற்றி கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். இது சிம்புவின் 47 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com