சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு : தயாரிப்பாளர் யார் தெரியுமா?

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு : தயாரிப்பாளர் யார் தெரியுமா?

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு : தயாரிப்பாளர் யார் தெரியுமா?
Published on

மாநாடு படத்திற்கு முன் சிம்பு சுசீந்திரன் இணையும் கிராமப்புறக் கதையை சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் தயாரிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ’மாநாடு’ அரசியல் கதைக்களம் கொண்டது என்பதால் அதிக கூட்டத்தைக் கூட்டி காட்சியமைப்புகளை எடுக்கவேண்டும். இதனால், கொரோனா பரவ வாய்ப்புள்ளது. படத்தின் தயாரிப்பாளர் கொரோனாவை காரணம் காட்டி கொரோனாவுக்குப் பிறகு படத்தை எடுக்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறார்.

இந்த குறிப்பிட்ட கால இடைவெளியை உபயோகமாக மாற்ற நினைத்த சிம்பு இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். கிராமப்புற கதைக்களம் கொண்ட, இப்படம் திண்டுக்கல்லில் 35 நாட்கள் படமாக்கப்படவுள்ளது. ஏற்கெனவே, சிம்பு தயாரிப்பாளர்களுடன் பிரச்சனை செய்கிறார் என்பதால் தயாரிப்பாளர்கள் கிடைக்காமல் இருந்த நிலையில், சிம்புவின் அப்பா டி.ராஜேந்தரே ’சிம்பு சினி ஆர்ட்ஸ்’ மூலம் தயாரிக்க முன்வந்துள்ளார்.

கோயில், சிலம்பாட்டம் படத்திற்குப் பின் சிம்பு நடிக்கும் கிராமப்புற கதைக்களம் இது. சுசீந்திரனும் பாண்டியநாடு பட வெற்றிக்குப்பிறகு தொடர் தோல்வி படங்களையேக் கொடுத்துவந்தார். தற்போது, அவரும் சிம்புவும் வெற்றி கொடுக்க போராடிக்கொண்டிருக்கிறார்கள். சிம்புவும் தனது உடல் எடையை குறைத்து இன்னும் அழகாகியிருக்கிறார்.  இப்படத்திற்கான அறிவிப்பு இம்மாத மிக விரைவில் வரவிருக்கிறது. இருவருக்கும் வெற்றி கிடைக்க நாமும் வாழ்த்துவோம்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com