சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு: நாளை திண்டுக்கல்லில் தொடங்கும் படப்பிடிப்பு!
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் படப்பிடிப்புகள் நாளை திண்டுக்கல் அருகே வாடிப்பட்டியில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது, மதுரையில் தங்கியிருக்கும் இருக்கும் சிம்பு மீனாட்சி அம்மன் கோயிலில் வழிப்பட்டுள்ளார். இங்கிருந்தபடியே சென்று சுசீந்திரன் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவுள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு மாநாடு படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கும் சிம்புவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படம் கைவிடப்படுவதாக அறிவிப்பு வெளியானது.
பிறகு இருவருக்குள்ளும் சமாதானம் அடைந்ததால் மாநாடு படத்தின் படப்பிடிப்பு அடுத்தமாதம் துவங்குகிறது என்று சுரேஷ் காமாட்சி கடந்தவாரம் ட்விட்டரில் அறிவித்திருந்தார். இந்நிலையில், ஏற்கெனவே சுசீந்திரன் இயக்கக்தில் சிம்பு கிராமப்புற கதையில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இப்படத்தின், படப்பிடிப்புகள் நாளை திண்டுக்கல் அருகிலுள்ள வாடிப்பட்டியில் துவங்கவிருக்கிறது.