சரண்யா மோகனிடம் தீவிரமாக பரதநாட்டியம் கற்கும் சிம்பு: வைரல் புகைப்படம்

சரண்யா மோகனிடம் தீவிரமாக பரதநாட்டியம் கற்கும் சிம்பு: வைரல் புகைப்படம்
சரண்யா மோகனிடம் தீவிரமாக பரதநாட்டியம் கற்கும் சிம்பு: வைரல் புகைப்படம்

சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்துவரும் சிம்பு, நடிகை சரண்யா மோகனிடம் பரதநாட்டியம் கற்றுக்கொள்ளும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் ‘ஈஸ்வரன்’ படத்தின் ஷூட்டிங் திண்டுக்கல் மாவட்டத்தின் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது. கிராமத்துக் கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். தமன் இசையமைக்கிறார். ’அச்சம் என்பது மடமையடா’ படத்திலிருந்தே சில வருடங்களாக உடல் பருமனுடன் காணப்பட்ட சிம்பு, 101 கிலோ எடையில் இருந்து தற்போது 30 கிலோவைக் குறைத்து 71 கிலோ எடைக்கு மாறியுள்ளது பாராட்டுக்களையும் பாஸிட்டிவான பார்வையையும் சிம்புமேல் குவித்துள்ளது.

சிம்புவின் மெலிந்த தோற்றமும், ஷூட்டிங் புகைப்படங்களும் வீடியோக்களும் அடுத்தடுத்து வெளியான நிலையில், தற்போது நடிகை சரண்யா மோகனிடம் சிம்பு பரதநாட்டியம் கற்றுக்கொள்ளும் புகைப்படம் லைக்ஸ்களை அள்ளுகிறது. நடிகர் சிம்பு மிகச்சிறந்த டான்ஸர் என்பது எல்லோரும் அறிந்ததே. எந்த நடனமாக இருந்தாலும் தனித்தன்மையுடன் தெறிக்கவிடுபவர், ‘சிலம்பாட்டம்’ படத்தில் நலம் தானா பாடலுக்கு சிறப்பான  நடனம் ஆடி வியக்க வைத்தார். தற்போது, ஈஸ்வரன் படத்திற்காக சரண்யா மோகனிடம் பரதநாட்டியம் கற்றுக்கொண்டுள்ளது எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது.

நடிகை சரண்யா மோகன் விஜய் நடிப்பில் வெளியான ‘காதலுக்கு மரியாதை’ படத்தில்தான் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர், வெண்ணிலா கபடிக்குழு, யாரடி நீ மோகினி, வேலாயுதம் படங்களின் மூலம் பிரபலமானார். திடீரென, கடந்த 2015 ஆம் ஆண்டு பல் மருத்துவர் அரவிந்த் கிருஷ்ணனை திருமணம் செய்து அனைவருக்கும் அதிர்ச்சியூட்டினார். திருமணத்திற்குப்பிறகு நடிக்காமல் இருந்த சரண்யா மோகன் பரதநாட்டியம் மீது ஆர்வத்தை திருப்பி தற்போது, பரதநாட்டிய ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், அவரிடம், சிம்பு நடனம் கற்றுக்கொள்ளும் புகைப்படம் வைரல் ஆகியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com