சினிமாவை விரல் நுனியில் வைத்திருப்பார் சிம்பு - அஷ்வினுடன் நினைவுகளை பகிர்ந்த விஷ்ணு

சினிமாவை விரல் நுனியில் வைத்திருப்பார் சிம்பு - அஷ்வினுடன் நினைவுகளை பகிர்ந்த விஷ்ணு

சினிமாவை விரல் நுனியில் வைத்திருப்பார் சிம்பு - அஷ்வினுடன் நினைவுகளை பகிர்ந்த விஷ்ணு
Published on

கிரிக்கெட் வீரர் அஷ்வினுடன் நேரலையில் பேசிய நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய சினிமா உலகம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்

கொரோனா ஊரடங்கில் நேரலை மூலம் சக கிரிக்கெட் வீரர்களுடனும், சினிமா பிரபலங்களுடனும் கிரிக்கெட் வீரர் அஷ்வின் பேசி வருகிறார். அந்த வகையில் நடிகர் விஷ்ணுவுடன் நேரலையில் பேசினார். அதில் இருவரும் தங்களின் ஆரம்பகால நட்பு குறித்து பேசினர். அப்போது பேசிய அஷ்வின், சிறுவயதில் இவரை விஷால் என்று தான் அழைப்போம். அப்போது அவர் தான் என்னுடைய கேப்டன். எனக்கு முன்னதாகவே அவன் கிரிக்கெட் வீரராக ஆவான் என நினைத்தேன். ஆனால் விதி விளையாடிவிட்டது எனத் தெரிவித்தார்

பின்னர் பேசிய விஷ்ணு, கிரிக்கெட்டை தான் விடவில்லை. அது தான் என்னை விட்டுவிட்டது. தமிழ் சினிமாவில் கால்வைத்த போது எனக்கு தெரிந்த ஒரே நபர் சிம்பு மட்டுமே. கதாநாயகன் படப்பிடிப்பின் போது சிம்புவைச் சந்தித்தேன். நிறைய பேசினேன். நிறையக் கற்றுக்கொண்டேன். அவர் எப்போதும் எதையும் நேரடியாக பேசக்கூடியவர். அவர் சிறுவயது முதலே சினிமாவில் இருக்கிறார். அவர் விரல் நுனியில் சினிமா இருக்கும். இன்னமும் அவருடனான நட்பு தொடர்கிறது எனத் தெரிவித்துள்ளார். விஷ்ணுவின் இந்த வீடியோவை சிம்பு ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com