’சில்லுனு ஒரு காதல்’ கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு-கெளதம் கார்த்திக் - புதிய அப்டேட்!

’சில்லுனு ஒரு காதல்’ கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு-கெளதம் கார்த்திக் - புதிய அப்டேட்!
’சில்லுனு ஒரு காதல்’ கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு-கெளதம் கார்த்திக் - புதிய அப்டேட்!

சிம்பு - கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம் தொடர்பான புதிய அறிவிப்பு நாளை வெளியாகும் என்று படத்தை தயாரிக்கும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2017 ஆ,ம் ஆண்டு கன்னடத்தில் சிவ ராஜ்குமார், ஸ்ரீ முரளி நடிப்பில் வெளியான ’மஃப்டி’ படம் சூப்பர் ஹிட் அடித்து வசூல் சாதனையும் செய்தது. இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியுள்ள ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா, சிவ ராஜ்குமார் கேரக்டரில் சிம்புவும், ஸ்ரீ முரளியாக கெளதம் கார்த்திக்கையும் நடிக்க ஒப்பந்தம் செய்தார்.

கடந்த ஆண்டு இந்தப் படத்தின் ஷூட்டிங்கும் சில நாட்கள் நடந்த நிலையில், சிம்புவின் கால்ஷீட் பிரச்சனையால் படம் பாதியிலேயே நின்றது. இந்நிலையில், சிம்பு உடலைக் குறைத்து ஈஸ்வரன், மாநாடு படங்களில் சரியான நேரத்திற்கு வந்து ஒத்துழைப்புக் கொடுப்பதால் மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு தயாராகிவிட்டது.

இப்படத்தை, சில்லுனு ஒருகாதல் இயக்குநர் கிருஷ்ணா இயக்குகிறார். நாளை படத்தில் தலைப்பு வெளியாகும் என்று அறிப்பு வெளியிட்டிருக்கிறது தயாரிப்பு நிறுவனம் ஸ்டூடியோ க்ரீன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com