தனது அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருங்கள் என்று நடிகர் சிலம்பரசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு யார் இயக்கத்தில், எந்த மாதிரியான கதைக்களத்தில் நடிக்கப்போகிறார் என்று பல தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. குறிப்பாக அஜித் நடிப்பில் வெளியான பில்லா படத்தின் 3 ஆம் பாகத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது. அது மட்டுமில்லாமல் படத்தின் இயக்கம், தயாரிப்பு ஆகியவையும் சிம்புவே பார்க்கப் போவதாகவும் தகவல் வெளிவந்தது. இதையடுத்து நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில், அடுத்த படம் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவதை நிறுத்துங்கள். படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் வரையில் தயவு செய்து பொறுமை கொள்ளுங்கள். உங்கள் ஆதரவுக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததால் தன் அடுத்த படம் மீதான தேர்வில் சிம்பு நிச்சயம் கவனமாக இருக்க வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.