'இவரைப்போல எனக்கு உடம்பு வேண்டும்' - ஜிம் மாஸ்டரிடம் புகைப்படத்தை நீட்டிய சிம்பு.!

'இவரைப்போல எனக்கு உடம்பு வேண்டும்' - ஜிம் மாஸ்டரிடம் புகைப்படத்தை நீட்டிய சிம்பு.!
'இவரைப்போல எனக்கு உடம்பு வேண்டும்' - ஜிம் மாஸ்டரிடம் புகைப்படத்தை நீட்டிய சிம்பு.!

நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஈஸ்வரன். இத்திரைப்படத்திற்காக சிம்பு அவரது உடல் எடையை 101 கிலோவிலிருந்து 71 கிலோவாக குறைத்துள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று அண்மையில் சமூகவலைத்தளங்களில் வைரலானது. இதனைத்தொடர்ந்து வெளியான ஈஸ்வரன் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக்கும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

உடல் எடையை குறைக்க சிம்பு கடுமையாக உழைத்ததாக அவருக்கு பயிற்சி அளித்த உடற்பயிற்சியாளர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதில், அவருக்கான எல்லா உணவுகளையும் அவரே சமைத்தார். கடுமையாக உடற்பயிற்சி செய்தார். விளையாட்டுகளிலும் ஈடுபட்டார் என பல விஷயங்களை குறிப்பிட்டார்.

சிம்புவின் உடல் எடை குறித்து குறிப்பிட்ட அவரது சகோதரியும், “சிம்பு இந்த மாற்றத்திற்காக நிறையவே உழைத்தார். இந்த மாற்றம் அவரது உடல் எடையை குறைப்பதற்காக மட்டுமல்ல. அவரது உண்மையான சுய நோகத்தையும் குறிக்கோள்களையும் அறிந்து கொள்வதற்காகவும்தான். இந்த பயணத்தில் அவருடன் நான் சில நாட்கள் இருந்தேன். தனது குறிக்கோள்களை நோக்கி கடினமாக உழைப்பதை நான் கண்டேன்” என்று பெருமையுடன் பதிவிட்டார்.

இந்நிலையில் கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோ தான் சிம்புவின் இன்ஸ்பிரேஷன் என உடற்பயிற்சியாளர் குறிப்பிட்டதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா குறிப்பிட்டுள்ளது.

அதில் உடற்பயிற்சியாளரிடம் கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோவின் புகைப்படத்தைக் காட்டி இப்படி ஒரு உடம்பு வேண்டும் என சிம்பு தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. முதலில் எடை குறைத்தல் பின்னரே கட்டுக்கோப்பான உடம்பு என்ற திட்டத்தில் சிம்பு இந்த அதிரடி உடல் எடை குறைப்பை செய்து காட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com