மிரட்டலான கெட்டப்பில் சதீஷ் : ’சட்டம் என் கையில்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சிம்பு

மிரட்டலான கெட்டப்பில் சதீஷ் : ’சட்டம் என் கையில்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சிம்பு
மிரட்டலான கெட்டப்பில் சதீஷ் :  ’சட்டம் என் கையில்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சிம்பு

நடிகர் சதீஷின் ‘சட்டம் என் கையில்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

‘நாய் சேகர்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான நடிகர் சதீஷின் அடுத்தப்பட அறிவிப்பு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியாகியிருக்கிறது. ’சட்டம் என் கையில்’ என்று தலைப்பிட்டுள்ள இப்படத்தினை ‘சிக்சர்’ பட இயக்குநர் சாச்சி இயக்கியுள்ளார். கோகுலகிருஷ்ணன் சண்முகம், ஸ்ரீராம் சத்யநாராயணன், பரத்வாஜ் முரளி கிருஷ்ணன் உள்ளிட்டோர் தயாரிக்கிறார்கள். பி.ஜி முத்தையா ஒளிப்பதிவு செய்ய ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைக்கிறார். இந்த நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. மிரட்டலான பார்வையுடன் காட்சியளிக்கிறார் சதீஷ். 

படம் குறித்து இயக்குநர் சாச்சி பேசும்போது, ”நடிகர் சதீஷை மாறுபட்ட தோற்றத்தில் காட்ட வேண்டும் என்று நினைத்தேன். சதீஷ் காமெடி மட்டுமே செய்யக் கூடியவர் அல்ல, அவரின் திறமையை, அவரது வேறொரு பரிமாணத்தை ’சட்டம் என் கையில்’ படத்தில் பார்க்கலாம். அவரது தனித்துவமான நடிப்பு நிச்சயம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும். என் முதல் படம் முழுக்க காமெடியை சுற்றியதாக இருக்கும். ஆனால், இந்தப் படம் அதிலிருந்து மாறுபட்டு பரபர த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. ஒரு இரவில் நடக்கும் கதை. நாயகன் டிரங்க் & டிரைவ் கேஸில் போலீசிடம் மாட்டுகிறார். அந்த இரவில் அவருக்கு நடக்கும் சம்பவங்கள் தான் இந்தப் படம்.

மென்மையாக ஆரம்பிக்கும் படம், ரசிகர்களை இருக்கை நுனியில் அமர்த்தி வைக்கும் பரபர திரில்லர் அனுபவமாக மாறிவிடும். நடிகர் பாவெல் நவகீதன் மற்றும் அஜய் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனைத்து மக்களையும் எளிதில் கவரும் படியாக, கமர்ஷியல் த்ரில்லராக இப்படம் இருக்கும். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ஒரு பிரபலம் வெளியிட்டால் நன்றாக இருக்குமென நடிகர் சிலம்பரசனை அணுகினோம். உடனே ஒப்புக் கொண்டு, படத்தை பாராட்டி ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார். அவருக்கு இந்த நேரத்தில் எங்களது படக்குழுவினர் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com