3 வாரங்களில் 53 கோடி ரூபாய் வசூல் செய்த சிலம்பரசனின் ’மாநாடு’

3 வாரங்களில் 53 கோடி ரூபாய் வசூல் செய்த சிலம்பரசனின் ’மாநாடு’

3 வாரங்களில் 53 கோடி ரூபாய் வசூல் செய்த சிலம்பரசனின் ’மாநாடு’
Published on

சிலம்பரசன் நடிப்பில் வெளிவந்த மாநாடு திரைப்படம் மூன்று வாரங்களில் 53 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிலம்பரசன் நடித்த திரைப்படம் மாநாடு. இந்த திரைப்படம் கடந்த 25ஆம் தேதி வெளியானது. இது டைம் லூப் வகையில் எடுக்கப்பட்டிருந்ததால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன் காரணமாக முதல் மூன்று நாட்களில் தமிழகத்தில் மட்டும் சுமார் 24 கோடி ரூபாய் வசூல் செய்ததாகக் கூறப்பட்டது. அதைத் தொடர்ந்தும் மக்கள் மத்தியில் மாநாடு படத்திற்கு மக்கள் ஆதரவு இருந்தது.

இதன் காரணமாக தமிழகத்தின் முதல் 3 வாரங்களில் சுமார் 53 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக மாநாடு திரைப்படத்தின் விநியோக வியாபாரத்தில் தொடர்புடைய Rock Fort நிறுவனத்தின் Creative Producer ஸ்ரீராம் தெரிவித்துள்ளார். அதேபோல் மாநாடு திரைப்படம் 3 வாரங்களை கடந்த நிலையிலும் ரசிகர்களின் வருகை கணிசமாக இருப்பதால் இன்னும் சில கோடிகளை வசூல் செய்யும் என ஸ்ரீராம் கூறுகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com