டிசம்பரில் இல்லை.. சிம்புவின் ‘பத்து தல’ ரிலீஸ் எப்போது? - வெளியான தகவல்

டிசம்பரில் இல்லை.. சிம்புவின் ‘பத்து தல’ ரிலீஸ் எப்போது? - வெளியான தகவல்
டிசம்பரில் இல்லை.. சிம்புவின் ‘பத்து தல’ ரிலீஸ் எப்போது? - வெளியான தகவல்

சிம்புவின் ‘பத்து தல’ திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளதாக முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் இந்தப் படம் சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்தப் படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீ முரளி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘முஃப்தி’ படத்தின் ரீமேக்தான் ‘பத்து தல’. அந்தப் படத்தை கன்னடத்தில் இயக்கிய இயக்குநர் நார்தன் தான் இந்தப் படத்தை முதலில் இயக்கினார். பின்னர் சில காரணங்களால் அவர் விலக ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ ஆகியப் படங்களின் இயக்குநர் கிருஷ்ணா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் கெளதம் கார்த்திக், பிரியா பவானிசங்கர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் ஏ.ஜி.ஆர். என்ற கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். ஏற்கனவே சிம்புவின் பிறந்தநாளையொட்டி வெளியான கிளிம்ப்ஸ் காட்சிகள் வரவேற்பை பெற்றநிலையில், டிசம்பர் 14-ம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ளதாக முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால், இடையில் நடிகர் சிம்பு தனது தந்தையின் உடல்நல குறைவு சிகிச்சை காரணமாக அமெரிக்காவில் சில நாட்கள் இருந்த நிலையில், படப்பிடிப்புகள் தடைப்பட்டது. மேலும் சில காரணங்களால் இந்தப் படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு நிறைவடைய தாமதமானதால், படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வருகிற மார்ச் மாதம் கடைசி வாரத்தில் இந்தப் படம் வெளியிடப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. பிப்ரவரி மாதம் வெளியிட முதலில் முடிவு செய்யப்பட்ட நிலையில், தனுஷின் ‘வாத்தி’ உள்பட பலப் படங்கள் அந்த மாதத்தில் வெளியிடப்பட உள்ளதால், திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது. இதனால் மார்ச் மாதம் இந்தப் படம் வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com