\
இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் சிலம்பரசனின் ‘மாநாடு’!

இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் சிலம்பரசனின் ‘மாநாடு’!

இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் சிலம்பரசனின் ‘மாநாடு’!
Published on

சிலம்பரசன்-வெங்கட் பிரபு கூட்டணியின் ‘மாநாடு’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகியுள்ளன

ஈஸ்வரன் படத்தை முடித்தக் கையோடு கடந்த நவம்பர் 9 ஆம் தேதி முதல் நடிகர் சிலம்பரசன் வெங்கட் பிரபுவின் ’மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார். இயக்குநரும் தயாரிப்பாளருமான சுரேஷ் காமட்சி தயாரிக்கும் இப்படத்தில் ‘அப்துல் காலிக்’ என்ற கேரக்டரில் சிலம்பரசன் நடிக்கிறார்.

யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.சமீபத்தில் இதன் ஃபர்ஸ்ட் லுக், செகெண்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருந்த நிலையில், சிலம்பரசனின் பிறந்தநாளையொட்டி ’மாநாடு’ டீசரும் வெளியாகி வரவேற்பை பெற்றது.

பாண்டிச்சேரியில் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. சென்னையில் நடந்துவரும் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் நடிகர் எஸ்.ஜே சூர்யா, விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ புகழ் உள்ளிட்டோர் இடம்பெற்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளன.

இதன்மூலம், ’குக் வித் கோமாளி’ புகழ் மாநாடு படத்தில் நடிக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com