நடிகர் தவசிக்கு சிலம்பரசன் 1 லட்சம் நிதியுதவி!

நடிகர் தவசிக்கு சிலம்பரசன் 1 லட்சம் நிதியுதவி!
நடிகர் தவசிக்கு சிலம்பரசன் 1 லட்சம் நிதியுதவி!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் உதவி நடிகர் தவசிக்கு நடிகர் சிம்பு 1 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

“வருத்தப்படாத வாலிபர் சங்கம்” “களவாணி” “சுந்தரபாண்டியன்” உள்ளிட்ட பல்வேறு படங்களில் துணை நடிகராக நடித்தவர் தவசி. உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் மதுரை சரவணா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் தனது சிகிச்சைக்கு திரைத்துறையினரோ, அரசோ உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக அம்மருத்துவனையின் உரிமையாளாரான திருப்பரங்குன்றம் திமுக எம்.எல்.ஏ டாக்டர் சரவணன், அவருக்கு இலவச சிகிச்சை அளித்து உதவி செய்தார். இதனைத்தொடர்ந்து அவருக்கு நடிகர் விஜய்சேதுபதி 1 லட்சம் ரூபாய் வழங்கி , செல்போன் மூலம் நலம் விசாரித்தார்.

அவரைத்தொடர்ந்து நடிகர்கள் சூரி மற்றும் சிவகார்த்திகேயன் ஆகிய இருவரும் தங்கள் பங்குக்கு தலா 25,000 ரூபாய் வழங்கினார்.இந்நிலையில் நேற்று செல்போன் மூலம் தவசியை தொடர்பு கொண்ட நடிகர் ரஜினிகாந்த் அவரிடம் நலம் விசாரித்துள்ளார். இந்த வரிசையில் தற்போது நடிகர் சிம்புவும் நடிகர் தவசிக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். வங்கிப் பரிவர்த்தனை மூலம் இந்த உதவியை சிம்பு செய்திருக்கிறார். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com