\
’அவள்’படத்தில் சீரியஸ் பேய் !

’அவள்’படத்தில் சீரியஸ் பேய் !

’அவள்’படத்தில் சீரியஸ் பேய் !
Published on

கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பேய் படங்கள், பேயாட்டம் போட்டன. இதற்கு ’காஞ்சனா’ படத்தின் ஹிட் காரணம். அதற்கடுத்து வந்த அரண்மனை உள்ளிட்ட பேய் படங்கள் வசூலில் சாதனை படைக்க, தொடர்ந்து பேய் படங்களாக வெளியாயின. இந்தப் பேய் படங்கள் எல்லாமே, காமெடி பேய் படங்களாக இருந்தன.

இந்நிலையில் காமெடியை ஓரம் கட்டி வைத்துவிட்டு பயத்தை மட்டுமே மையப்படுத்தி, ’அவள்’ என்ற படம் உருவாகியுள்ளது. சித்தார்த், ஆண்ட்ரியா நடித்துள்ள இந்த சீரியஸ் பேய்ப்படம், கண்டிப்பாக ரசிகர்களுக்கு திகிலை கொடுக்கும் என்கிறது படக்குழு. இடாகி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் வயாகாம் 18 மோஷம் பிக்சர்ஸூம் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com