’பிச்சைக்காரனு’க்குப் பின் அக்கா-தம்பி பாசம் சொல்கிறார் சசி

’பிச்சைக்காரனு’க்குப் பின் அக்கா-தம்பி பாசம் சொல்கிறார் சசி

’பிச்சைக்காரனு’க்குப் பின் அக்கா-தம்பி பாசம் சொல்கிறார் சசி
Published on

இயக்குனர் சசி, தனது அடுத்தப் படத்துக்கு ’சிவப்பு மஞ்சள் பச்சை’ என்று டைட்டில் வைத்துள்ளார்.

தமிழில், சொல்லாமலே, ரோஜாக்கூட்டம், டிஷ்யூம், பூ, ஐந்து ஐந்து ஐந்து, பிச்சைக்காரன் ஆகிய படங்களை இயக்கியவர் சசி. இவர் இப்போது சித்தார்த், ஜி.வி.பிரகாஷ்குமார் இணைந்து நடிக்கும் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்துக்கு ’சிவப்பு மஞ்சள் பச்சை’ என்று டைட்டில் வைக்கப் பட்டுள்ளது.

இதை அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பி பிள்ளை தயாரிக்கிறார். இவர், வேதாளம், அரண்மனை, மாயா, பாகுபலி 1, காஞ்சனா, சிவலிங்கா உட்பட பல படங்களை விநியோகம் செய்தவர்.

அக்கா - தம்பி உறவை புதிய கோணத்தில் சொல்லும் படமான இதில், அக்காவாக மலையாள நடிகை லிஜோ மோள் நடிக்கிறார். அவர் ஜோடி யாக, சித்தார்த் நடிக்கிறார். இதில் அவருக்கு டிராபிக் இன்ஸ்பெக்டர் வேடம். லிஜோ மோளின் தம்பியாக ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கிறார். பைக் ரேசராக வருகிறார். மற்றும் காஷ்மீரா, மதுசூதனன், நக்கலைட் யுடியூப்  குழு நடிகர்கள் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். சித்து குமார் இசை அமைக்கிறார். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com