போதைப் பார்ட்டி -பாலிவுட் நடிகர் சித்தாந்த் கபூர் கைது

போதைப் பார்ட்டி -பாலிவுட் நடிகர் சித்தாந்த் கபூர் கைது
போதைப் பார்ட்டி -பாலிவுட் நடிகர் சித்தாந்த் கபூர் கைது

போதைப்பொருள் உட்கொண்டதாக பாலிவுட் நடிகர் சக்தி கபூரின் மகன் சித்தாந்த் கபூர் பெங்களூரு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு எம்.ஜி. சாலையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலர் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து காவல்துறையினர் அங்கு சென்று சோதனை நடத்தினர். அங்குள்ள சிலரை கைது செய்து, பரிசோதனைக்காக அவர்களின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டது. இதில் 35 பேரில் 5 பேர் போதைப் பொருள் பயன்படுத்தியது ரத்த பரிசோதனையில் தெரிய வந்தது.

அதில் பாலிவுட் நடிகர் சித்தாந்த் கபூரும் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சித்தாந்த் கபூரை கைது செய்து, காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். பிரபல பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர், சித்தாந்தின் சகோதரி ஆவார். முன்னதாக பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துக்கொண்டபோது, இந்தி திரையுலகை சேர்ந்த பலரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது ஷ்ரத்தா கபூரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். ஆனால் அவருக்கு எதிரான புகார் எதுவும் நிரூபிக்கப்படவில்லை.


இந்நிலையில், அவரது சகோதரர் போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ளார். அண்மையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், சொகுசு கப்பல் ஒன்றில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டு சிறையில் இருந்தநிலையில், சோதனையின்போது ஆர்யன்கானிடம் போதைப்பொருள் எதுவும் பிடிபடவில்லை என்றும், அதனால் இந்த வழக்கிலிருந்து ஆர்யன் கான் விடுவிக்கப்படுவதாக டெல்லி சிறப்பு விசாரணைக்குழு தனது குற்றப்பத்திரிகையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com