\
ஜனநாயகத்திற்கு வெட்கக்கேடான நாள் இது: நடிகர் சித்தார்த்

ஜனநாயகத்திற்கு வெட்கக்கேடான நாள் இது: நடிகர் சித்தார்த்

ஜனநாயகத்திற்கு வெட்கக்கேடான நாள் இது: நடிகர் சித்தார்த்
Published on: 

நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் வெற்றி பெற்றுள்ள நிலையில் அது குறித்து நடிகர் சித்தார்த் ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

“நாடும் இந்த நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என்னும் எண்ணமே இப்போது அனைவரின் மனதிலும் உள்ளது. குழந்தைகளும் சட்டசபையில் என்ன நடக்கிறது என கேட்டு, பார்த்து தெரிந்துக்கொள்ளட்டும். இந்த நாட்கள் ஜனநாயகத்தில் வெட்கக்கேடானது” என்று அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் “சிறையிலுள்ள சசிகலாவிற்கு ஒரு லேப்டாப் கொடுத்துவிடுங்கள். எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது கும்பல் போக்குவரத்து செலவையாவது (எங்கள் வரி பணத்தை) சேமிக்கட்டும். நாம் உண்ணும் உணவில் இன்னும் உப்பு சேர்த்து கொள்ள வேண்டும்”என்றும் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com