\
மகள் பிறந்தநாள்: தெலங்கானா கிராமத்திற்கு இலவச தடுப்பூசி வழங்கிய மகேஷ் பாபு

மகள் பிறந்தநாள்: தெலங்கானா கிராமத்திற்கு இலவச தடுப்பூசி வழங்கிய மகேஷ் பாபு

மகள் பிறந்தநாள்: தெலங்கானா கிராமத்திற்கு இலவச தடுப்பூசி வழங்கிய மகேஷ் பாபு
Published on

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா நேற்று தனது 9 வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதனையொட்டி நடிகர் மகேஷ் பாபு தெங்கானா மாநிலத்தின் சித்தாபூர் கிராம மக்களுக்கு தனது சொந்த செலவில் இலவச தடுப்பூசி வழங்கினார்.

சமீபத்தில்கூட, தனது தந்தையும் நடிகருமான கிருஷ்ணாவின் 78 வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக, மகேஷ் பாபு ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்திலுள்ள புர்ரிபாலம் கிராம மக்கள் அனைவருக்கும் மருத்துவமனைகளுடன் இணைந்து தனது சொந்த செலவில் தடுப்பூசியை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், மகேஷ் பாபுவின் ரசிகர்களும் ஆதரவற்றவர்களுக்கு உணவும், ஆதரவற்ற இல்லங்களுக்கு மளிகைப்பொருட்களும் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com