மோடி ஆட்சிக்கு வரவில்லை என்றால்... - நடிகர் சித்தார்த் அதிரடி டுவிட்

மோடி ஆட்சிக்கு வரவில்லை என்றால்... - நடிகர் சித்தார்த் அதிரடி டுவிட்

மோடி ஆட்சிக்கு வரவில்லை என்றால்... - நடிகர் சித்தார்த் அதிரடி டுவிட்
Published on

மோடி மீண்டும் ஆட்சிக்கு வரவில்லை என்றால்  சத்தியமாக எனது ட்விட்டர் ஆக்கவுண்ட்டை நிரந்தரமாக நீக்கம் செய்து விட்டு செல்கிறேன் என நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கு கடந்த ஏப்ரல் 11- ஆம் தேதி தொடங்கி கடந்த 19- ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில்  வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இதில்‌ 67.11 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. 

முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் பாஜக 310 இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 102 இடங்களிலும் மற்றவை 93 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. இதனிடையே நடிகர் சித்தார்த் பாஜகவின் செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வந்தார். இதற்கு பாஜக தரப்பினரும் பதில் அளித்து வந்தனர். 

இந்நிலையில், இன்று மக்களை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், மோடி மீண்டும் ஆட்சிக்கு வரவில்லை என்றால் சத்தியமாக எனது ட்விட்டர் ஆக்கவுண்டை நிரந்தரமாக நீக்கம் செய்து விட்டு செல்கிறேன் என நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com