சினிமா
பல உள்ளங்களைக் கவர்ந்த இந்த குழந்தைக்கு பிறந்தநாள்: சிபிராஜ் வாழ்த்து
பல உள்ளங்களைக் கவர்ந்த இந்த குழந்தைக்கு பிறந்தநாள்: சிபிராஜ் வாழ்த்து
நடிகர் சத்யராஜின் பிறந்தநாளான இன்று அவரது மகன் சிபிராஜ், சத்யராஜின் குழந்தைப் பருவ படத்தைப் பகிர்ந்து தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
நடிகர் சிபிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் சத்யராஜின் குழந்தை பருவப் படத்தை பகிர்ந்து வெளிட்டுள்ள செய்தியில், “தனது நடிப்பால் மட்டுமல்லாமல், மனிதநேயத்தாலும் பல மில்லியன் உள்ளங்களைக் கவர்ந்த இந்த குழந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். #HBDSathyaraj #Kattappa” என்று பதிவிட்டுள்ளார்.
அவருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் ட்விட்டரில் வாழ்த்துகளை பகிர்ந்துவருகிறார்கள். குறிப்பாக விஜய் ரசிகர்கள், சத்யராஜ் விஜயுடன் நடித்த நண்பன், தலைவா படங்களின் போட்டோக்களை பகிர்ந்து வாழ்த்துகின்றனர். சிவகார்த்திகேயன் ரசிகர்கள், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் போட்டோக்களை பதிவேற்றி வாழ்த்தி வருகின்றனர்.