தைப்பூசத்திற்கு தியேட்டரில் வெளியாகிறது சிபிராஜின் ‘கபடதாரி’

தைப்பூசத்திற்கு தியேட்டரில் வெளியாகிறது சிபிராஜின் ‘கபடதாரி’
தைப்பூசத்திற்கு தியேட்டரில் வெளியாகிறது சிபிராஜின் ‘கபடதாரி’

சிபிராஜின் ’கபடதாரி’ திரைப்படம் வரும் தைப்பூசம் அன்று ஜனவரி 28 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் சத்யராஜின் மகன் சிபிராஜ் கடந்த 2002-ஆம் ஆண்டு ஸ்டூடண்ட் நம்பர் ஒன் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதற்குப் பிறகு அவர் நடித்தப் படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்திக்கவே சில வருடங்கள் நடிக்காமல் இருந்தார். அவர் நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு கடைசியாக ’நாணயம்’ படம் வெளியானது. அதன்பிறகு நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு நாய்கள் ஜாக்கிரதை படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார்.

தொடர்ந்து ஜாக்சன் துரை, போக்கிரி ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தற்போது, பிரதீப் கிருஷ்ண மூர்த்தி இயக்கத்தில் ‘கபடதாரி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி மொத்த படத்தையும் முடித்ததாக படக்குழு அறிவித்தது.

இதையடுத்து சிபிராஜின் பிறந்தநாளையொட்டி நடிகர் சூர்யா கபடதாரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்நிலையில், வரும் ஜனவரி 28 ஆம் தேதி ’கபடதாரி’ படம் தியேட்டர்களில் வெளியாகும் என்றும் விரைவில் ட்ரைலர் வெளியாகும் என்றும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com