\
நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட படங்கள் - முதலிடம் பிடித்த ‘ஷ்யாம் சிங்கா ராய்’

நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட படங்கள் - முதலிடம் பிடித்த ‘ஷ்யாம் சிங்கா ராய்’

நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட படங்கள் - முதலிடம் பிடித்த ‘ஷ்யாம் சிங்கா ராய்’
Published on

நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்தவாரம் அதிகம் பார்க்கப்பட்டப் படங்களின் பட்டியலில் நானியின் ‘ஷ்யாம் சிங்கா ராய்’ உலகளவில் மூன்றாவது இடத்தையும் இந்தியப் படங்களில் முதலிடத்தையும் பிடித்துள்ளது.  

நானி - சாய் பல்லவி, கீர்த்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டியன் நடிப்பில் கடந்த மாதம் 24 ஆம் தேதி வெளியான‘ஷ்யாம் சிங்கா ராய்’ படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளம் கைப்பற்றியிருந்தது. படம் வெளியாகி ஒரு மாதம் ஆனபிறகு கடந்த 21 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி சமூக வலைதளங்கள் முழுக்க பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. குறிப்பாக, தமிழ் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாகியுள்ள இப்படத்தினை ராகுல் சங்ரிதியன் இயக்கியுள்ளார். இந்த நிலையில், கடந்த 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்டப்  படங்களில் ’ஷ்யாம் சிங்கா ராய்’ உலகளவில் மூன்றாவது இடத்தினையும் இந்திய அளவில் முதலிடத்தினையும் பிடித்துள்ளது. அதுவும், வெளியான மூன்றே நாட்களில் மூன்றாவது இடம் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com