அப்பாவின் அரசியல் பிரவேசத்திற்கு என் ஆதரவு உண்டு: ஸ்ருதிஹாசன் அறிவிப்பு
கமல்ஹாசன் அரசியல் பிரவேசத்திற்கு தனது ஆதரவு எப்போதும் இருக்கும் என அவரது மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணாநகரில் தனியார் கடை ஒன்றின் திறப்பு விழா நிகழ்ச்சியில் ஸ்ருதிஹாசன் கலந்து கொண்டார். அவரை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர். கடை திறப்பு நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்ருதிஹாசன், "நான் எப்போதுமே அப்பாவை ஆதரிப்பவள். பொதுவாக அப்பாவின் முயற்சிகளுக்கு என் ஆதரவு உண்டு. அரசியல் மட்டுமல்ல அவர் என்ன செய்தாலும் அவருக்கு என் ஆதரவு இருக்கும். ஏனென்றால் அவர் மீது வைத்துள்ள மரியாதை அப்படி. அவர் எதை செய்தாலும் அர்ப்பணிப்போடும் அக்கறையோடும் செய்வார். எனக்கு அரசியல் பற்றிய விழிப்புணர்வு அதிகம் இல்லை. ஆகவே அதை பற்றி நான் பேச முடியாது. ஆனால் அப்பாவின் அரசியல் பிரவேசத்திற்கு என் ஆதரவு கண்டிப்பாக உண்டு" என்று அவர் கூறினார்.