ஸ்ருதிஹாசன் உருவாக்கியுள்ள பட்டன் முகக்கவசம்.. சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிட்டு அறிமுகம்

ஸ்ருதிஹாசன் உருவாக்கியுள்ள பட்டன் முகக்கவசம்.. சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிட்டு அறிமுகம்

ஸ்ருதிஹாசன் உருவாக்கியுள்ள பட்டன் முகக்கவசம்.. சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிட்டு அறிமுகம்
Published on

இன்னும் நம்மை விட்டு விலகாமல் இருக்கிறது கொரோனா. சமூகத்தில் முகக்கவசத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி பிரபலங்கள் சொன்னால் மக்கள் கேட்பார்கள். முகக்கவசம் அணிவதும் சமூக விலகலும் கட்டாயமாகியுள்ள சூழலில், வண்ணமயமான பட்டன்கள் கொண்ட அழகிய முகக்கவசத்தை உருவாக்கியுள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன்.

எப்போதும் ஸ்டைலிஷாக தோன்றுவதில் ஆர்வம் கொண்ட அவர், ஒரு கலர்புல் முகக்கவசத்தைத் தயாரித்துள்ளார். அதில் நிறைய சிறிதும் பெரிதுமான பட்டன்களைப் பயன்படுத்தியுள்ளார். பாடுவதற்காக வெளியே செல்லும்போது, அதுபற்றிப் பேசிய வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார் ஸ்ருதிஹாசன்.

அந்த வீடியோவில், "நான் பாடுவதற்காக புதிய பட்டன் முகக்கவசத்தை அணிந்து செல்கிறேன். நீங்களும் அதை விரும்புகிறீர்களா? நான் செய்கிறேன், அது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று உற்சாகம் தெரிவித்துள்ளார் ஸ்ருதி. கடைசியாக சூர்யாவுடன் சிங்கம் 3 படத்தில் நடித்திருந்த அவர், எஸ்பி ஜனநாதன் இயக்கும் லாபம் படத்தில் விஜய்சேதுபதியுடன் நடித்து வருகிறார். தற்போது பிங்க் படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் பவன் கல்யாணுடன் இணைந்திருக்கிறார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com