\
பாகுபலி ஸ்டைலில் சங்கமித்ரா: ஸ்ருதி ஹேப்பி

பாகுபலி ஸ்டைலில் சங்கமித்ரா: ஸ்ருதி ஹேப்பி

பாகுபலி ஸ்டைலில் சங்கமித்ரா: ஸ்ருதி ஹேப்பி
Published on

கான் திரைப்பட விழாவில் ’சங்கமித்ரா’ படத்தை அறிமுகம் செய்வது குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

சுந்தர்.சி இயக்கத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் நடிக்கும் படம், ‘சங்கமித்ரா’. 8ம் நூற்றாண்டு வரலாற்றைக் கொண்ட இந்தப் படத்தை சுந்தர்.சி இயக்குகிறார். தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் ராமசாமி தயாரிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இதன் அறிமுக விழா, கான் திரைப்பட விழாவில் நடக்க இருக்கிறது. இதில் படக்குழுவினர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

இதுபற்றி ஸ்ருதிஹாசன் கூறும்போது, ‘கான் பட விழாவின் மூலமாக, சங்கமித்ராவை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் கொண்டு செல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

தேனாண்டாள் பிலிம்ஸ் சேர்மனும் நிர்வாக இயக்குனருமான ராமசாமி கூறும்போது, ‘இந்தப் படம் எங்களின் பெருமைமிகு தயாரிப்பு. இந்தப் படத்தின் டைட்டிலை, கான் பட விழாவில் வெளியிட இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. படம் இரண்டு பகுதியாக உருவாக இருக்கிறது’என்றார். பாகுபலி படம் இரண்டு பாகங்களாக உருவானது போல இந்தப் படமும் இரண்டு பாகங்களாக உருவாக இருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com