காதலருடன் நடிகை ஸ்ரேயா ரகசிய திருமணம்: மும்பையில் நடந்தது

காதலருடன் நடிகை ஸ்ரேயா ரகசிய திருமணம்: மும்பையில் நடந்தது

காதலருடன் நடிகை ஸ்ரேயா ரகசிய திருமணம்: மும்பையில் நடந்தது
Published on

நடிகை ஸ்ரேயா- ரஷ்ய டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவ் திருமணம் மும்பையில் ரகசியமாக நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். 

தமிழில், ’எனக்கு 20 உனக்கு 18’ படம் மூலம் அறிமுகமானவர் ஸ்ரேயா. தொடர்ந்து, மழை, ரஜினிகாந்த் ஜோடியாக சிவாஜி, கந்தசாமி, அழகிய தமிழ்மகன், திருவிளையாடல் ஆரம்பம், தோரணை உள்பட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் தவிர, தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் மொழிகளிலும் நடித்துள்ள ஸ்ரேயா, மும்பை அந்தேரியில் வசித்து வருகிறார்.

இவரும் ரஷ்யாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவ்வும் (Andrei Koscheev) காதலித்து வந்தனர். ஆண்ட்ரே, பல ரெஸ்டாரண்ட்களையும் நடத்தி வருகிறார். சில வருட காதலுக்குப் பிறகு இவர்கள் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். திருமணம் மார்ச் மாதம் 17, 18, 19 ஆகிய 3 நாட்கள் கோலாகலமாக உதய்பூரில் நடக்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், இதை ஸ்ரேயா மறுத்தார். 

இந்நிலையில் அவர் திருமணம் ரகசியமாக நடந்துவிட்டதாக மும்பை பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 12-ம் தேதி மும்பை, அந்தேரியில் உள்ள ஸ்ரேயாவின் வீட்டில் இந்து முறைப்படி திருமணம் நடந்ததாகவும் இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர் என்றும் செய்தி வெளியிடப்பட்டுள்ளன. திரைத்துறையில் இருந்து இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய், ஷபானா ஆஷ்மி ஆகியோர் மட்டுமே இத்திருமணத்தில் கலந்துகொண்டனர். இவர்கள், ஸ்ரேயா வீட்டுக்கு எதிரில் வசிப்பவர்கள். 

இதை ஸ்ரேயாவுக்கு நெருங்கியவர்கள் உறுதி செய்துள்ளனர். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com