போர்ச்சுக்கல் நாட்டின் சுற்றுலா தளங்களில் மெய் மறந்து நின்றேன் என்று நடிகை ஸ்ரேயா கூறினார்.
தற்போது பாலகிருஷ்ணா ஜோடியாக ’பைசா வசூல்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்துவருகிறார் ஸ்ரேயா. பூரி ஜெகநாத் இயக்கும் இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
இந்தப் படத்துக்காக போர்ச்சுக்கல் சென்றிருந்த ஸ்ரேயா, படப்பிடிப்பை முடித்துவிட்டு ஒரு மெகா டூர் அடித்துவிட்டு வந்திருக்கிறார். படக்குழு இந்தியா திரும்ப, போர்ச்சுக்கல்லின் சந்து பொந்துகளுக்குள் சென்றுவந்த அனுபவத்தைச் சொன்னார் ஸ்ரேயா.
‘இதுல கதைப்படி, நான் போர்ச்சுக்கல்ல ஒர்க் பண்றவளா நடிக்கிறேன். அவளுக்கு என்ன மாதிரியான பிரச்னை வருதுன்னு கதை போகும். இதுக்காக போர்ச்சுக்கல் போனேன். இதுவரை தென்னிந்திய படங்கள் காண்பிச்சிருக்காத லொகேஷன்களை இந்தப் படத்துல பார்க்கலாம். ஷூட்டிங்கை முடிச்சுட்டு தோழிகளோட டூர் போயிட்டேன். லிஸ்பன் நகர்ல இருந்து பார்சிலோனா வரை, சாலை வழியா ஒரு ஜாலி பயணம். பார்த்த ஒவ்வொரு இடமுமே ஆச்சரியமாவும் வியக்குற மாதிரியும் இருந்துச்சு. அங்க இருக்கிற பீச், துறைமுகம், பாலங்கள் எல்லாமே அப்படியொரு அழகு’ என்கிறார் ஸ்ரேயா.